பேருந்துப் பயணக் கட்டணம் குறைப்பு

14

பேருந்துப் பயணக் கட்டணத்தை இன்று திங்கட்கிழமை முதல் அமுலாகும் வகையில் 5 சதவீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

வருடாந்தப் பேருந்துக் கட்டணத் திருத்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சுக்கும் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய புதிய குறைந்தபட்சப் பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 28 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath