இன்னும் விற்பனை செய்யப்படாமலிருக்கும் “ஆசிய ராணி”

“ஆசிய ராணி” என அழைக்கப்படும் இலங்கையில் காணப்படும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் (நீலக்கல்) வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய மாற்று முறைகள் இல்லாத காரணத்தினால் இன்னும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படவில்லை என அதன் உரிமையாளர் சமிலா சுரங்கா தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு இரத்தினபுரி – பலாங்கொட பகுதியில் உள்ள சுரங்கத்தில் இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக, 310 கிலோ எடை கொண்ட மிகப் பெரிய இரத்தினக்கல்லான ‘ஆசியாவின் ராணியை 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 2,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு கொள்வனவு செய்ய டுபாய் நிறுவனமொன்று முன்வந்தது.

எனினும், அந்த விலையில் இரத்தினக்கல்லை வழங்க இலங்கை தயாராக இல்லை எனவும், அதனை விடவும் அதிக விலை எதிர்பார்ப்பில் ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.