சுவிட்சர்லாந்தில் பூட்டப்பட்ட காரில் சிக்கியிருந்த இரண்டு நாய் குட்டிளை கடந்த புதன்கிழமை பிற்பகல் லொசான் பொலிஸார் மீட்டனர்.
குறித்த இரண்டு நாய்க்குட்டிகளும் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் அவைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
லொசான் (Lausanne), Ouchy வானக தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் குறித்த இரண்டு நாய்க்குட்டிகள் இருந்தன
அவற்றை அவதானித்த பொலிஸார் காரின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயன்றனர் எனினும் அது பலனளிக்கவில்லை.
அதன்பின் பொலிஸார் காரின் கதவுகளை உடைத்து நாய்க்குட்டிகளை வெளியே எடுத்து அவற்றுக்கு தண்ணீர் வழங்கியுள்ளனர்.
அதன்பின்னர் நாய்க்குட்டிகள் உரிமையாளர்களின் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை நாய்க்குட்டிகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்