சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது

சிறைச்சாலை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாயின் அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நீதித்துறை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த முடியாது.

இதன்படி சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சட்ட ரீதியான உரிமை கிடையாது எனவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்