மீண்டும் விலை குறைப்பு

ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது..

இதன்படி, ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூடு 60 ரூபாவால் குறைக்கப்பட்டு 490 ரூபா

கோதுமை மா 55 ரூபாவால் குறைக்கப்பட்டு 320 ரூபா

நெத்தலி 50 ரூபாவால் குறைக்கப்பட்டு 1450 ரூபா

வெள்ளைச் சீனி 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 260 ரூபா

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டு 169 ரூபா

பருப்பு 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 285 ரூபா என விற்பனை செய்யப்படவுள்ளது.