மன்னார் ஆயரை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

-மன்னார் நிருபர்-

மன்னாரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை யை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.கலந்துரையாடலை மேற்கொண்ட ஜனாதிபதி மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்.

சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நாயகம் அடிகளார் , முன்னாள் குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயரினால் ஜனாதிபதிக்கு மாதா சொரூபம் ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்