கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கணேமுல்ல சந்தியிலிருந்து அநியாகந்த வைத்தியசாலை வரையிலான கொழும்பு நோக்கிய இரு வழித்தடங்களும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
ஹப்புகொட ஸ்ரீ வர்தனாராம விகாரையின் வருடாந்த வெசாக் பெரஹரா ஊர்வலம் வீதி உலா வரவுள்ளதன் காரணமாகவே இவ்வாறு மூடப்படவுள்ளது.
இன்று சனிக்கிழமை இரவு 10:30 முதல் நள்ளிரவு 1:00 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.