வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை அறிந்து, உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சமைத்த உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்குமாறும், அந்த நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக ஏனைய மாவட்டங்களில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.