சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அச்சுறுத்தப்பட்டது – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர

கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின் துண்டிப்பை அமுலாக்கமல் இருக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் நடத்திய கலந்துரையாடலுக்கு மனித உரிமை ஆணைக்குழுவால் அழைக்கப்பட்ட போது கலந்துரையாடலில் பங்கேற்ற மனித உரிமை ஆணையத்தின் இரு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத இரண்டு ஆவணங்களில் கையொப்பமிடுமாறு வற்புறுத்தப்பட்டதாகவும், சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அச்சுறுத்தப்பட்டதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சட்டக் கருத்துக்களை அதிகாரிகள் ஏற்கனவே ஆலோசித்துள்ளனர் மற்றும் நடந்த நிகழ்வுகள் குறித்து எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளனர்.

நான் நேற்று காலை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளேன். அரசியலமைப்பு சபைக்கு எழுத்து மூலம் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் மின்சார அதிகாரிகள்இ பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் உட்பட்டவர்கள்இ பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.