மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று புதன் கிழமை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 6.30 மணியளவில் ஆரம்பமானது.
இதேவேளை காலை கருத்தினால் திருமஞ்சனம் (பாவனா அபிஷேகம்) இடம் பெற்று அதனை தொடர்ந்து இகபர சௌபாக்கியங்களையருளும் முருகனுக்கு இரண்டாம்கால வேள்வி, திருமஞ்சன ஆகுதி, 108 திரவியாகுதி, மலர் அர்ச்சனை, திருமுறை விண்ணப்பம், வேண்டுதல் விண்ணப்பம், பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்குதல், கோபுர கலசம் நிறுவுதல், மேலும் மாலை மூன்றாங்கால வேள்வி, திருமஞ்சன ஆகுதி, 108 திரவியாகுதி, நிறையாகுதி, மலர் அர்ச்சனை, திருமுறை விண்ணப்பம், வேண்டுதல் விண்ணப்பம், பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்குதல் என்பன இடம்பெறும்.
இரவு 8.30 மணியளவில் தெய்வத் திருமேனிகளுக்கு எண்வகை மருந்து சாத்துதல் (அஷ்ட பந்தனம்) இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டதுடன், அன்னதான நிகழ்விலும் பங்கேற்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


