கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை இரு சிறுமிகள் கடிதம் எழுதி வைத்து விட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர்.
க.பொ.த சாதாரணப் பரீச்சைக்கு தோற்றி பெறுபேறுக்காக காத்திருந்த 17 வயதுடைய 3 சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
17 வயதுடைய இரண்டு சிறுமிகளும் தம்மால் இந்த பூமியில் வாழ முடியாது என தெரிவித்து தமது இறப்புக்கு காரணம் தாங்களே என கடிதம் ஒன்றை எழுதி இருவரும் அதில் கையொப்பம் இட்ட நிலையில் குறித்த கடிதம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்