-யாழ் நிருபர்-
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால், நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் – தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் நின்ற வேப்ப மரம் திடீரென முறிந்து விழுந்தது.
அந்த மரமானது வீதிக்கு குறுக்காக விழுந்த காரணத்தால் போக்குவரத்து தடைப்பட்டது.
பின்னர் இது குறித்து வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு தகவல் வழங்கப்பட்டது.
அந்தவகையில் விரைந்து செயற்பட்ட பிரதேச சபையின் ஊழியர்கள் குறித்த மரத்தினை வெட்டி அகற்றினர்.