-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில், பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று, நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.
கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த மார்ச் 23 ஆம் திகதி, தாயொருவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்று உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.