மட்டக்களப்பில் இடம்பெற்ற பல்சமய ஒன்றிய கூட்டம்

பல்சமய ஒன்றிய கூட்டம் மட்டக்களப்பு மஞ்சதொடுவாயில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.

எகெட் நிறுவனத்தின் இணைப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், கல்லடி தொடக்கம் காத்தான்குடி வரை உள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

1986 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பல்சமய ஒன்றியம், 2017 ஆம் ஆண்டு முதல் கிளைச்சங்கமாக செயற்பட தொடங்கியது.

அதன்பிற்பாடு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்