Sri Lanka Tamil News Site

இலங்கையில் குரங்கம்மை நோயுடன் இருவர் அடையாளம்

- Advertisement -

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளார், குறத்த நோயாளி தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நோயாளி கண்டறியப்பட்டதன் மூலம், நாட்டில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை துபாயிலிருந்து நாடுதிரும்பிய 42 வயதான குறித்த நபர் அறிகுறிகள் காரணமாக சுகாதார அதிகாரிகளை கலந்தாலோசித்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

நாட்டில் குரங்கு காய்ச்சலின் முதல் தொற்று கடந்த நவம்பர் 4ஆம திகதி துபாயில் இருந்து நாடு திரும்பிய 20 வயது நபருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இவர் நவம்பர் 1 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தெற்காசிய பிராந்தியத்தில் இதுவரை மொத்தம் 32 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 17 நோயாளிகள், தாய்லாந்தில் 12 பேர், இந்தோனேசியாவில் ஒருவர் மற்றும் இலங்கையில் இருந்து இருவருமாக இதுவரை பதிவாகியுள்ளன.

இந்த வைரஸ் எளிதில் பரவும் என்பதால், பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் போது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -