இஸ்ரேல் மீதான திடீர் தாக்குதலை தொடர்ந்து ஹமாஸுக்கு ஆதரவாக மியா கலீஃபா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அவர் நீண்ட காலமாக இஸ்ரேலை ஒரு நிறவெறி கொண்ட நாடு என்று விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில், 800 க்கும் மேற்பட்டவர்களை காவு கொண்ட கடந்த சனிக்கிழமை திடீர் தாக்குதலை அடுத்து தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய ட்வீட்களை அவர் வெளியிட்டு வருகின்றார்.
“பாலஸ்தீனத்தின் நிலைமையைப் பார்த்து, பாலஸ்தீனியர்களின் பக்கம் நில்லாமல் இருந்தால், நீங்கள் நிறவெறியின் தவறான பக்கத்தில் இருக்கிறீர்கள், காலப்போக்கில் அதை வரலாறு சுட்டிக்காட்டும்” என்று அவர் தனது எக்ஸ் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தாக்குதல்களை காணொளி பதிவு செய்யும் போது, செங்குத்தாக அன்றி, கிடைமட்டமாக பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் அதன் விளைவுகளையும், உயிர்கள் பறிபோவதையும் நிறவெறியர்கள் காண முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.