இந்தியாவின் – பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வயிற்றில் இருந்து பல்வேறு உலோகப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியை சேரந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு காய்ச்சல ஏற்பட்டுள்ளது.
காய்ச்சலினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவரது உடல் முழுதும் சோதனை செய்யப்பட்டது.
இதன்போது, குறித்த நபரின் வயிற்றில் பல்வேறு உலோகப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவற்றை நீக்க வைத்தியர்களால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3 மணி நேரம் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நோயாளி மனநோயால் பாதிக்கப்பட்டவர் எனவும், அவர் இதனால் குறித்த உலோகப் பொருட்களை உட்கொண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.