ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு : சச்சித்ர சேனாநாயக்கவின் குரல் பரிசோதனை

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க, குரல் பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த 6 ஆம் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ்  விசாரணை பிரிவில் சட்டத்தரணி ஊடாக சரணடைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர், கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து சச்சித்ர சேனாநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அத்துடன், இந்த வழக்குடன் தொடர்புடைய ஒலி நாடா தொடர்பான விசாரணையின் படி, அவரை குரல் பரிசோதனைக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்டுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கமைய, இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க, இன்று புதன்கிழமை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.