டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மன்னார் மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் நிலையில், காய்ச்சல், தலையிடி உள்ளடங்களாக டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று உரிய சிகிச்சை யை பெற்றுக்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் தற்போது சில இடங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மன்னார் நகரம், தோட்டவெளி, எருக்கலம்பிட்டி போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 118 டெங்கு நோயாளர்கள் இந்த வருடத்தில் அதிக அளவில் குறிப்பிட்ட மாதத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது நவம்பர் மாதத்தில் தற்போது வரை 33 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் அதிகமானவர்கள் மன்னார் நகரம் மற்றும் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள்.

இவ்வருடம் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 236 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.எனினும் மரணங்கள் எதுவும் நிகழவில்லை.பல நோயாளர்கள் தற்போது குருதி கசிவு நிலையுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடுமையான போராட்டத்தின் மத்தியில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு நோய் குணமாக்கப்பட்டு வருகின்றது.

எனவே பொது மக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.

குறிப்பாக நீரை சேகரித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தாங்கிகள் மற்றும் வீட்டினுள் அடிக்கடி சுத்தப்படுத்த படாத சிறிய பாத்திரங்கள் மற்றும் பூச்சாடிகள் போன்றவற்றில் டெங்கு நுளம்பு முட்டையிட்டுஇகுடம்பிஇகூட்டுப்புழுக்கள் உறுவாகி டெங்கு நுளம்பின் வளர்ந்த பருவம் உறுவாகின்றது.

எனவே பொது மக்கள் இவ்விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.மன்னார் மாவட்டத்தில் ஏனைய மாவட்டம் போன்று இல்லாது சிறிய நீர் பாத்திரங்கள் மற்றும் நீர்நிலைகளில் டெங்கு நுளம்பு உறுவாகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் செயல்பட்டுஇநுளம்பு உற்பத்தியாகும் சந்தர்ப்பத்தை இல்லாது செய்ய வேண்டும்.

மேலும் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் கிராம மக்கள் தற்போது பருவ கால கடற் தொழிலை மேற்கொள்ள தமது வீடுகளை பூட்டி விடத்தல் தீவில் தங்கி உள்ளனர்.

இதனால் குறித்த வீடுகளில் நீர் தேங்கி இருக்கக்கூடிய பாத்திரங்கள்இமற்றும் நுளம்பு பெருகக்கூடிய இடங்களை கண்டு பிடிப்பதில் சுகாதார துறையினருக்கு பாரிய பிரச்சினைகள் உள்ளது.

எனவே பொதுமக்கள் உடனடியாக தமது வீடுகளுக்குச் சென்று அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் போது தமது வீடுகளை திறந்து நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து அதனை அகற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மேலும் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் வீடுகளில் அதிக நாட்களாக சுய சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே டெங்கு பரவும் இடங்களில் உள்ளவர்கள் காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்து உரிய சிகிச்சைகள் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது பல டெங்கு நோயாளர்கள் குருதி கசிவு ஏற்பட்ட பின்னர் வைத்தியசாலைக்கு வரும் நிலை காணப்படுகின்றது.இதனால் அவர்களின் நோய் நிலையை குணமாக்க வைத்தியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே டெங்கு நோய் அறிகுறிகள் காணப்படுகின்றவர்கள் அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.