Sri Lanka Tamil News Site

எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்பு

- Advertisement -

சர்வதேச சந்தையின் தற்போதைய விலையுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை பெப்ரவரி மாதத்திற்குள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி எரிவாயு விலை குறைந்தது.

- Advertisement -

இதன்படி, பெறுமதி 200,-300 ரூபா வரை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது சந்தையில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 4,409 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு LPG சிலிண்டர் (12.5 கிலோ) 5,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

- Advertisement -