களுவாஞ்சிக்குடி பிரதேசத்திலுள்ள, பொது இடங்கள் மற்றும் ஆற்றங்கரையை அண்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக குப்பையை கொட்டிய நபருக்கெதிராக, இன்று வெள்ளிக்கிழமை சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி பொதுச் சகாதார பரிசோதகர் தங்கவடிவேல் கஜனினால், 1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தலும் தொற்று நோய்த்தடுப்பும் கட்டளைச்சட்டம் (Under the Quarantine Act) இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது குறித்த நபருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 2500 ரூபா தண்டப்பணமும் நீதிமன்றினால் விதிக்கப்பட்டது.