நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நீடித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி வசந்த சேனாதீர வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
கண்டி, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, காலி மற்றும் குருநாகல் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 26 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை ‘அம்பர்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 13 மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் நிலை ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னர் மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மீண்டும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.