-யாழ் நிருபர்-
இந்தியா – மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களது படகு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை எரிபொருள் தீர்ந்ததனால் யாழ்ப்பாணம் – சம்பில்துறையில் கரையொதுங்கியது.
பெருமாள் வாஞ்சிநாதன், ராஜேந்திரன் மகேஷ், இளங்கோவன் ரஞ்சித்குமார் ஆகிய மீனவர்களே இவ்வாறு படகுடன் கரையொதுங்கினர்.
குறித்த மீனவர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்