நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவாலான கடமைகளுடன் ஆறு வருடங்கள் கடந்துவிட்டன என ஜெசிந்தா ஆர்டன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜெசிந்தா ஆர்டன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -