யாழ். குருநகர் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு: ஐவர் கைது

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஐவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவரும் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவரும், கஞ்சா கலந்த மாவாவுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 19 மதுபான போத்தல்கள், 70 மில்லிகிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்