பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தீப்பரவலில் இருவர் உயிரிழந்தனர்.
கடற்றொழிலுக்கு பயன்படுத்தும் ரெஜிபோர்ம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை களஞ்சியப்படுத்தும் இடமொன்றிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த களஞ்சியசாலையில் தொழிலில் ஈடுபட்டிருந்த உடபுஸ்ஸலாவை – லோமன்ட் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 45 வயதுடைய இருவரே தீப்பரவலில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்