இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் 02 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
அத்துடன், இந்த விஜயத்தின்போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கான இரு நாள் விஜயத்தை நிறைவுசெய்ததன் பின்னர், அமைச்சர் ஜெய்சங்கர் மாலைதீவு நோக்கி புறப்படவுள்ளார்.