நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை வியாழக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவிலான விடயங்கள் குறித்து சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவின் “அயல் நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கையினை மீள வலியுறுத்தும் இந்த விஜயமானது, கடல் மார்க்கமாக மிகவும் நெருக்கமான அயல் நாடாகவும் காலம் காலமாக நல்லுறவைக் கொண்ட நண்பனாகவும் உள்ள இலங்கைக்கு இந்தியாவினது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்டுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்