மட்டக்களப்பில் 10 வீதமானோர் தங்களை வாக்காளர் பட்டியலில் பதிந்துகொள்வதில்லை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பு மாவட்டத்தில்10 சதவீதமான வாக்காளர்கள்வாக்காளர் பட்டியலில்தங்களைப் பதிந்துகொள்வதில்லை என்றவிவரம் தெரியவந்துள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழுவின்மட்டக்களப்பு அலுவலக முகாமைத்துவ சேவைகள் அதிகாரி பி.சத்தியபவான் தெரிவித்தார்.

மாவட்ட சர்வமதசெயற்குழுவின் ஒருங்கிணைப்புக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய்சன சமூக மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர்இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

தேசிய சமாதானப்பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சர்வமத செயற்குழுவின் சமாதான செயற்பாட்டாளர்கள், மதப் பிரமுகர்கள்ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தேர்தல்கால செயற்பாடுகள்சம்பந்தமாக தொடர்ந்து தெளிவுபடுத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக முகாமைத்துவ சேவைகள் அதிகாரி  சத்தியபவான், மட்டக்களப்புமாவட்டத்தில் பல்வேறுகாரணங்களின் நிமித்தம்10 சதவீதமான வாக்காளர்கள்தங்களைப் பதிந்துகொள்ளாத நிலைமைகள்காணப்படுகின்றன. கவன ஈனம்,தவறு அல்லதுகுறிப்பிட்ட சந்தர்ப்பசூழ்நிலைகள் காரணமாக இவ்வாறான நிகழ்வு இடம்பெற்று விடுகின்றது.

எனவே, இந்தவிடயத்தில் மக்களுக்காக மக்களோடு சேர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்மாவட்ட சர்வமத செயற்குழு போன்ற அமைப்புக்கள் இதுவிடயமாக மக்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்குவதன் மூலம் இனிவரும் காலங்களில் விடுபட்டுப்போன குடியிருப்பாளர்கள் தங்களை வாக்காளர்களாகப்பதிந்து கொள்ளும்சந்தர்ப்பம் ஏற்படும்.”என்றார்.

நிகழ்வில் மாவட்ட சர்வமத செயற்குழுவின் செயற்பாட்டாளர்கள் தேர்தல் சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்களைக் கேட்டுத் தெளிவுபெற்றனர்.

இந்நிகழ்வில் தேர்தல்கள்ஆணைக்குழுவின் மட்டக்களப்புஅலுவலக அபிவிருத்திஉத்தியோகத்தர் எஸ்.ரேவதன், விளையாட்டுஉத்தியோகத்தரும் மாவட்டசர்வமத செயற்குழுவின்ஒருங்கிணைப்புச் செயலாளருமானகே. சங்கீதா,கூட்டுறவுத் திணைக்கள  கணக்குப் பரிசோதகர்எம்.ஐ.எம். உசனார், தொழுநோய்சம்பந்தமான கிழக்குமாகாண சமூகப்பணி வளவாளரும் இணைப்பாளருமான அருட்பணிஏ.எஸ்.ரூபன் உட்படஇன்னும் முக்கியஸ்தர்கள்கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்