சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனுக்கு அடுத்த மாதம் அனுமதி கிடைக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாணய சபை மீளாய்வு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இலங்கை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கொள்கை வட்டி வீதங்களை குறைத்ததன் பலனை உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் கடன் விகிதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.