12 கோடி பெறுமதியான சொத்து எவ்வாறு வந்தது? பெண்ணொருவரின் சொத்துகள் முடக்கம்!

காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த சொத்து எவ்வாறு ஈட்டப்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படாத காரணத்தினால்  காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவரின் சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட சொத்துக்களின் சந்தைப் பெறுமதி சுமார் 120 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சொத்துக்களில் காலி தடல்ல பிரதேசத்தில் நான்கு மாடி கட்டிடமும், அக்மீமன பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் தேயிலை மற்றும் மிளகு காணியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சொத்துக்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்