காலி, யக்கலமுல்ல, மாகெதர பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.