அரசின் வருமானம் அதிகரிக்கும் – ஜனாதிபதி

மின்சாரம் போன்றவற்றுக்கான வட் வரி விலக்குகள் மீளாய்வு நடவடிக்கைகளின் பின்னர் நீக்கப்படும் என ஜனாதிபதி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஓராண்டில் அரசின் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சேவையில் உகந்த நிலையை உருவாக்க முடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரச நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காக சீனா எக்ஸிம் வங்கியிடமிருந்து அரசாங்கம் வாங்கும் கடன்கள் டிசெம்பர் இறுதிக்குள் மத்திய அரச கடன்கள் என்று அடையாளப்படுத்தப்படும்.

சர்வதேச வர்த்தகத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 மூஆக அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமூக சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7%-8% உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கப்படுகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளர்.