நாட்டில் இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 5,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 386,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 5,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 355,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதற்கமைய 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.