திடீர் வெள்ளப்பெருக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட, திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் புஷி அணைக்கு அருகே உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட, திடீர் வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சிக்கியுள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் ஐந்து பேரும் சடலங்களாகவே மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கில் அந்தக் குடும்பம் சிக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

இதேவேளை புஷி அணைக்கு அருகே உள்ள அந்த ஆற்றிற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்