Sri Lanka Tamil News Site

தொடரும் முட்டை விலை பிரச்சினை

- Advertisement -

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் சோதனைகள் தொடர்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும்,  இது சில சமயங்களில் முட்டைக்கான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் மூலம் தங்கள் வியாபாரத்தை நடத்துவதில் கடுமையான சிக்கல்களை உருவாக்குவதாக முட்டை விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நேற்றும் இன்றும் அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடுவதற்கு நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

- Advertisement -

இதன்படி, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் கடை மற்றும் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரதான கடைக்கு எதிராக அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட சுற்றிவளைப்பு பிரிவு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 20ம் தேதி முட்டையை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டு, அதன்படி வெள்ளை முட்டை அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை 46 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வேண்டும்.

இந்த விலைக்கு மேல் முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், எனினும், முட்டை சந்தையில் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு உட்பட்டு முட்டை விற்பனை செய்யப்படுகிறதா என்பதை இன்று சோதித்தோம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, முட்டைகளுக்கு அவ்வப்போது கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படுவதால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக சிறு முட்டை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -