இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அனுமதி இல்லை

 

இந்தியாவில் தற்போது பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் பறவை காய்ச்சல் இருந்ததால் அந்த நாடுகளில் இருந்து முட்டை இறக்குமதியை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

தேவைப்பட்டால், பறவைக் காய்ச்சல் இல்லாத அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதில் எந்தத் தடையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.