பறவைக் காய்ச்சல் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யக் கூடாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
தற்போது, உலகின் பல முட்டை ஏற்றுமதி நாடுகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது.
உலகின் முக்கிய முட்டை ஏற்றுமதியாளர்களில் நெதர்லாந்து, துருக்கி, போலந்து, அமெரிக்கா, மலேசியா, ஜெர்மனி, சீனா, ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும்.
- Advertisement -
இந்த பட்டியலில் இந்தியா 22வது இடத்தில் உள்ளது.
தற்போது அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது.
இவ்வாறான நிலையில் இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்யக்கூடிய நாட்டைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு, இந்தியாவின் சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அதனை அனுமதிப்பதில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானித்திருந்தது.
பறவைக் காய்ச்சல் இல்லாத எந்த நாட்டிலிருந்தும் முட்டைகளை இறக்குமதி செய்ய முடியும் என அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
- Advertisement -