அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான பொது மக்களது அதிருப்தி

-சுதந்தராஜ் சௌமினி-

நாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவுகள் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தரவுகள் சேகரிக்கப்பட்டு கடந்த காலங்களில் வங்கிகளின் ஊடாக வழங்கப்பட்டது.

எனினும் இந்த கொடுப்பனவுகளில் மக்கள் அதிதிருப்தி அடைந்து இது தொடர்பிலான முறைப்பாடுகளை முன் வைக்கின்றனர்.

” அரசினால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த உதவி தொகை சரியான முறையில் மக்களுக்கு சென்றடையவில்லை.இந்த கொடுப்பனவுகளை பெற்று கொள்வதற்காக வங்கிகளை நாடி செல்லும் போது அவர்கள் தங்களுக்கு சரியான தகவல்களை வழங்குகிறார்கள் இல்லை” என்று குற்றம் சாட்டப்படுவதுடன்,  இது தொடர்பிலான சரியான தீர்வை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.