-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிபோக்கு சந்தியை அண்மித்த பெரிய பரந்தன் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள நீர்பாசன வாய்க்கால் ஒன்றில் இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்ட நிலையில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -
குறித்த சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர். குறித்த பகுதிக்கு தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- Advertisement -