யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, சிறுப்பிட்டி பகுதியில் வளைவில் திரும்பிய போது கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றுக்குள் நுழைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதேவேளை வாகன திருத்தகத்தில் நின்று வேலை செய்தோரும் சம்பவத்தின் போது அவ்விடத்தில் நிற்காததால் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர்.
அத்துடன் வாகன திருத்துமிடத்தில் நின்ற மற்றொரு பேருந்து ஒன்றின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.
போக்குவரத்து சபை பொறியியல் பிரிவினர் வருகை தந்து பேருந்தினை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- Advertisement -