கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட விஞ்ஞான பீட மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் கொழும்பு 7 பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு 7லில் உள்ள குதிரைப்பந்தாட்ட மைதானத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 23 வயதுடையவர் எனவும் அவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -
பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. உயிரிழந்தவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட விஞ்ஞான பீட மாணவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

- Advertisement -