நாடளாவிய ரீதியில் தேங்காய் விளைச்சலில் பற்றாக்குறை காணப்படுவதன் காரணத்தினால் இலங்கை சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சராசரியாக ஆண்டு முழுவதும் 1500மிமீ மழைவீழ்ச்சியும், தென்னை அறுவடைக்கு 28 செல்சியஸ் வெப்பநிலையும் தேவை.ஆனால் கடந்த சில மாதங்களாக சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலையும் நிலவுகின்றமைாயால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, காலி மாவட்டத்தில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 80 ரூபா தொடக்கம் 120 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், அன்றாட உணவு தயாரிப்பதற்கு அத்தியாவசியமான தேங்காயின் விலை அதிகரித்துள்ளதால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.