Sri Lanka Tamil News Site

கிளைமோர் குண்டு மீட்பு

- Advertisement -

காலி, அகுங்கல்ல வெலிகந்த பகுதியில் வாழைமரங்களின் மத்தியில் இதன் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை தலைமையக பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், கிளேமோரின் முன்பக்கத்தில் “எதிரிகளுக்கு முன்னோக்கிச் செல்லுங்கள்” என்று சில வாசகங்கள் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

- Advertisement -

இந்த வெடிகுண்டு தற்போது வெளிநாட்டில் இருக்கும் பெந்தோட்டையைச் சேர்ந்த ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர் ஒரு குற்றவாளியான கொஸ்கொட சுஜியின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை அகுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -