சீனாவில் கோரத் தாண்டவமாடும் கோரானா திறந்த வெளிகளில் உடல்கள் எரிப்பு
- Advertisement -
சீனாவில் கொரோனா தொற்றால் கடந்த ஒருமாதத்தில் மாத்திரம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 939 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன.
சீனாவில் கோர தாண்டவமாடும் கொரோனா தொற்றால் இதுவரை 90 கோடி பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு கோடி பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள்.
- Advertisement -
கொரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்படுபவர்களுக்கு கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடிகளின் ஆற்றல் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சீன மருத்துவமனைகளில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்தநிலையில் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து திறந்தவெளியில் சடலங்கள் தகனம் செய்யப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பிற்கு 60 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் 8ஆம் திகதி முதல் ஜனவரி 12ஆம் திகதி வரை 60,000 பேர் உயிரிழந்ததாகவும் , அதில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் 65 வயதுக்கு மேலானவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
- Advertisement -