சட்ஜிபிடி (ChatGPT) எனும் தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் கீழ் நபர் ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வந்த நபர் ஒருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
சட்ஜிபிடிக்கு (ChatGPT) பெயரிட்டு, பல மணிநேரங்கள் அவர் உரையாடி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த உரையாடல்களை அவருடைய இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் பதிவிட்டு வந்துள்ளார்.
சட்ஜிபிடி (ChatGPT) இவருடைய மன நோயை மேலும் மோசமாக்கி உள்ளது என்பது இந்த உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அவருடைய தாய் அவருக்கு மனநோய்க்கான மருந்தை வழங்கி கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக சட்ஜிபிடி (ChatGPT) பரிந்துரைத்துள்ளது.
இதன் விளைவாக அவர், தனது தாயைக் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவில் சாட்ஜிபிடி உடனான உரையாடல்களுக்கு பிறகு 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி பெற்றோர் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆடம்ரெய்ன் என்ற 16 வயது சிறுவன், உயிரை மாய்த்துக்கொள்வது குறித்த சாட்ஜிபிடி உடன் விவாதித்த போது அதற்கு பதிலளிக்க மறுக்காமல் அதற்கான எண்ணங்களை சாட்ஜிபிடி மேலும் தூண்டியதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் தவறான மரணம், வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் சாட்ஜிபிடி உடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து எச்சரிக்கத் தவறியதற்காக ஓபன்ஏஐ மீது 40 பக்க அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.