இந்த வருடம் நாணயத்தாள்கள் அச்சிடும் விகிதம் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் நாணய உருவாக்கத்தை பெருமளவு குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நாணயச் சபையின் கொள்கை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் அச்சிடப்பட்ட நாணயத்தின் அளவு 341 பில்லியன் ரூபாவாகும்.

ஆனால் இந்த வருடம் ஜனவரி-அக்டோபர் இல் வெளியிடப்பட்ட பணத்தின் அளவு 47 பில்லியன் ரூபாயாகக் குறைந்துள்ளது, என தெரிவித்துள்ளார்.