Sri Lanka Tamil News Site

கேக் வகைகளின் விலை அதிகரிப்பு

- Advertisement -

முட்டையின் விலை அதிகரிப்பு காரணமாக பண்டிகைக் காலத்தில் கேக்கின் விலையும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

சந்தையில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன குற்றம் சாட்டினார்.

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து ஆகஸ்ட் 19ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -