ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் தலா 1,000 கிலோகிராம் உருளைக்கிழங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாகக் கொள்வனவு செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ்வாறு கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாகக் கொள்வனவு செய்யப்படும் உருளைக்கிழங்குகளை, லங்கா சதொச நிறுவனத்தின் சில்லறை விற்பனை வலையமைப்பின் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கும் இந்த முன்மொழிவின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.