2023ஆம் ஆண்டு சிறுபோகத்தில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக நெற்செய்கை உள்ளிட்ட 58 ஆயிரத்து 770 பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக, 53ஆயிரத்து 965 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பில் விவசாய அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.